Thursday, October 03, 2013

ரூபாய் 25000 பரிசு தரக் காத்திருக்கும் நாவல் போட்டி

ஐக்யா டிரஸ்ட் ஆதரவுடன் இணையவெளி ஏடும், தாரிணி பதிப்பகமும் இணந்து
நடத்தும் மகத்தான நாவல் போட்டி !

நல்ல நாவல் எழுதுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது
உயிரோட்டமுள்ள ஓர் மொழிக்கு இழுக்கு ஆகும். நமது அண்டை மாநிலங்களான
ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் மிகச் சிறந்த நாவல்கள்
ஆண்டுதோறும் பெருகி வருகின்றன. அங்கெல்லாம் செயல்படும் மாநில,
மத்தியசாஹித்திய அமைப்புக்களில் கூடுமானவரை நேர்மை, அரசியல் மற்றும் பிர
செல்வாக்குகள் தலையிடாமை நாவல் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

தனி அமைப்புக்கள் தலை எடுத்தால் தவிர தமிழ் நாவலைக் காப்பாற்ற முடியாது
என்ற நிலை வந்துள்ளது. அதைப் போக்கக் கருதி இணையவெளி ஏடும் தாரிணி
பதிப்பகமும் இணந்து நாவல் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளன.

நிபந்தனைகள் :-

01. ஏதேனுமொரு நுண்கலையை மையமாகவோ சுற்றுச் சூழலாகவோ வைத்து எழுதப்படும்
நாவலுக்கு ரூ.12,500-ம்

02. முற்றிலும் புலம் பெயர்ந்த சூழலில் வாழ்வோர் வாழ்க்கை பற்றிய
நாவலுக்கு ரூ.12,500-ம் வழங்க்கப்படும்.

03. வயது வரம்பே கிடையாது

04. பக்க வரம்பும் கிடையாது.

05. புது முகம் பழைய முகம் யார் வேண்டுமானாலும் எழுதலாம்

07. ஓர் எழுத்தாளர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப வேண்டும்

08. சரித்திரம், சமூகம், அறிவியல் புதினங்களும் வரவேற்கப்படுகின்றன.

09. பரிசு பெறும் நாவல் தவிர மற்றவற்றில் தகுதியுடையன புத்தக வடிவம் பெறும்

10.எந்த ஒரு படைப்பையும் ஈமெயில் மூலமோ குறுந்தகடு மூலமோ மட்டுமே அனுப்பவேண்டும்

11. எந்த ஒரு படைப்பின் மூலக்கரு மற்றும் மொழி நடை முற்றிலும் கவனத்தோடு
பாதுகாக்கப்பட்டு உரிமைக்காப்பு தரப்படும்

12. ஏற்கனவே வந்த எந்த நாவலின் சாயலும் இல்லாதவாறு அமைவது நலம்

13. புத்தம் புதிய கதைக் களம்..புத்தம்புதிய கதைக்கரு மிக முக்கியம்

14. 2014 மார்ச் 31 முடிவு தேதி. பரிசு 04-09-2014-ல் உறுதியாக வழங்க்கப்படும்

பிற விபரங்க்கட்கு :- vaiyavan.mspm@gmail.com

விக்கிப்பீடியா பயனர்கள் அனைவரது பார்வைக்கும் பரிந்துரைக்கப்படுகின்றது.
தாங்களும் எழுதலாம். திறமையுடையோருக்கும் பரப்புரை செய்யலாம்.

அன்புள்ள , சங்கர இராமசாமி, பயனர் :-rssairam

https://ta.wikipedia.org/s/o

No comments: